Latest News
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் மாலை (03) அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கூட்ட மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்னளை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஓன்றியத்தின் தலைவர் எஸ்எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்தீப் ஏ.ஜே.கபூருக்கும், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஷர் ஈழமதி ஜப்பாருக்கும், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் எஸ்.எல்.எம்.அபூபக்கர் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல்.முனாஸ் ஆகியோர்கள் அருகில் நிற்பதையும், கலந்து கொண்ட ஊடகவியலாளர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.எஃப்.அலா சிபாக்)
(படங்கள்: எம்.எஃப்.அலா சிபாக்)
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து இறுதி சுற்றுப்போட்டி நேற்று மீனோடைக்கட்டு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது அதிதியாக கலந்து கொண்ட மீனோடைக்கட்டு ஜும்ஆ பள்ளி வாசல் சபையின் உறுப்பினரும் பொலிஸ் உத்தியோகத்தருhன ஐ.எல்.முனாப்தீன் வெற்றிபெற்ற கோல்ட் ஸ்டார் கழகத்தின் தலைவரிடம் கிண்ணத்தை வழங்கி வைப்பதையும், கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வீரர்களையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.எஃப்.அலா சிபாக்)
(படங்கள்: எம்.எஃப்.அலா சிபாக்)
(எம்.எஃப்.அலா சிபாக்)
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமுக்கு எதிராக நாளாந்தம் வெளியிடப்பட்டு வருகின்ற துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கடிதங்களும். அதற்கு அமைவாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று (02.05.2011) திங்கட்கிழமை வெளியான பகிரங்கக் கடிதமும் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டதற்கு அமைவாக அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களே! நீங்கள் கடந்த கால பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் பார்ப்போமாயின் அம்பாறை கல்வி வலயத்தில் 301 சிங்கள மேலதிக ஆசிரியர்களும், தெஹியத்த கண்டியில் 39 சிங்கள மேலதிக ஆசிரியர்களும் மொத்தமாக 340 சிங்கள மேலதிக ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதன் படியும் மேலும் மகஒயாவில் 4 சிங்கள ஆசிரியர்களும், கந்தளாயில் 27 சிங்கள ஆசிரியர்களும் மொத்தமாக 31 சிங்கள ஆசிரியர்களின் தேவைப்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக 340 சிங்கள மேலதிக ஆசிரியர்களில் 31 தேவைப்பாடு ஆசிரியர்களை கழித்துப்பார்க்கையில் 309 சிங்கள மேலதிக ஆசிரியர்கள் உள்ள நிலையினை அறிந்தும் கடந்த திங்கட்கிழமை (02.05.2011) ஆம் திகதி அன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் 70 சிங்கள கலைப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலைமையில் தொடர்ச்சியாக தமிழ், முஸ்லிம் வேலையற்ற பட்டதாரிகளை திட்டமிட்டு புறக்கணித்து வருவதற்குக் காரணம் என்ன?
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 6 ஆயிரத்திற்கு மேல் காணப்படுவதாகவும் இதில் தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்புக்கள் மிக அருகியே காணப்படுவதாகவும் ஆசிரியர் சமப்படுத்தல் எனும் போர்வையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்காது சுமார் 10 வருடங்களாக தமிழ் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் மட்டும் முட்டுக்கட்டையாக இருப்பது ஏன்? இச்செயல் ஆச்சரியத்தையும், மனவேதனையும் தரக்கூயவாறு ஏன் உள்ளாh? இவ்விடயம் விளங்காத புதிராகவுள்ளது.
இவ்வாறு பல கேள்விகள் எழுப்பிய பல துண்டுப் பிரசுரங்கள் தொடராக வெளியாகிக் கொண்டு வருவதை அறியக்கூடியவாறுள்ளது. மேலும் மேல் மாகாணத்தில் 4856 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் அது உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஆசிரியர்கள் மேலதிகமா இருக்கின்ற நிலையில் மேலும் தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி அங்கு நான் அரச செலவு வீண்விரயமாவதை விரும்பவில்லை என நிஸாம் ஏன் மேல் மாகாணத்தில் 4856 ஆசிரியர்கள் இருப்பதினால் அங்கு அரச செலவு வீண்விரயம் செய்யப்படுகின்றது. அல்லவா இதற்கான உங்கள் விளக்கம் என்ன? என்றும் அக்கடிதத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிக்கின்றனர்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமுக்கு எதிராக நாளாந்தம் வெளியிடப்பட்டு வருகின்ற துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கடிதங்களும். அதற்கு அமைவாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று (02.05.2011) திங்கட்கிழமை வெளியான பகிரங்கக் கடிதமும் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டதற்கு அமைவாக அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களே! நீங்கள் கடந்த கால பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் பார்ப்போமாயின் அம்பாறை கல்வி வலயத்தில் 301 சிங்கள மேலதிக ஆசிரியர்களும், தெஹியத்த கண்டியில் 39 சிங்கள மேலதிக ஆசிரியர்களும் மொத்தமாக 340 சிங்கள மேலதிக ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதன் படியும் மேலும் மகஒயாவில் 4 சிங்கள ஆசிரியர்களும், கந்தளாயில் 27 சிங்கள ஆசிரியர்களும் மொத்தமாக 31 சிங்கள ஆசிரியர்களின் தேவைப்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக 340 சிங்கள மேலதிக ஆசிரியர்களில் 31 தேவைப்பாடு ஆசிரியர்களை கழித்துப்பார்க்கையில் 309 சிங்கள மேலதிக ஆசிரியர்கள் உள்ள நிலையினை அறிந்தும் கடந்த திங்கட்கிழமை (02.05.2011) ஆம் திகதி அன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் 70 சிங்கள கலைப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலைமையில் தொடர்ச்சியாக தமிழ், முஸ்லிம் வேலையற்ற பட்டதாரிகளை திட்டமிட்டு புறக்கணித்து வருவதற்குக் காரணம் என்ன?
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 6 ஆயிரத்திற்கு மேல் காணப்படுவதாகவும் இதில் தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்புக்கள் மிக அருகியே காணப்படுவதாகவும் ஆசிரியர் சமப்படுத்தல் எனும் போர்வையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்காது சுமார் 10 வருடங்களாக தமிழ் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் மட்டும் முட்டுக்கட்டையாக இருப்பது ஏன்? இச்செயல் ஆச்சரியத்தையும், மனவேதனையும் தரக்கூயவாறு ஏன் உள்ளாh? இவ்விடயம் விளங்காத புதிராகவுள்ளது.
இவ்வாறு பல கேள்விகள் எழுப்பிய பல துண்டுப் பிரசுரங்கள் தொடராக வெளியாகிக் கொண்டு வருவதை அறியக்கூடியவாறுள்ளது. மேலும் மேல் மாகாணத்தில் 4856 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் அது உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஆசிரியர்கள் மேலதிகமா இருக்கின்ற நிலையில் மேலும் தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி அங்கு நான் அரச செலவு வீண்விரயமாவதை விரும்பவில்லை என நிஸாம் ஏன் மேல் மாகாணத்தில் 4856 ஆசிரியர்கள் இருப்பதினால் அங்கு அரச செலவு வீண்விரயம் செய்யப்படுகின்றது. அல்லவா இதற்கான உங்கள் விளக்கம் என்ன? என்றும் அக்கடிதத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிக்கின்றனர்.
கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட முழுவதற்குமான 'முனாஸ் நற்பணி மன்றம்' அம்பாறை மாவட்டத்திலுள்ள மிக வறிய குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நாளாந்தம் அத்தியவசிய தேவைகளை நிறைவுசெய்யக் கூடியவற்றை இலவசமாக செய்து கொடுத்து வருகின்ற முறையை முன்னெடுத்து வருகின்றன. அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலமுனை உசைனியா நகர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வறிய குடும்பங்களுக்கு இலவச மின்சார வசதியும், நீர் இணைப்பு வசதியும் செய்து கொடுத்துள்ளது. மேலும் அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதியில் இரு வறிய குடும்பங்கள் இணம் காணப்பட்டு அவர்களுக்கான மலசல கூட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அத்துடன் 'முனாஸ் நற்பணி மன்றம்' மிக மிக வறிய குடும்பங்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது.அதன் ஆரம்பமாக பாலமுனை ஓ.பி.ஓ. வீதியைச் சேர்ந்த பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் ஆரம்பப் பணியை முன்னெடுத்து வீடு கட்டிக் கொடுப்பதற்கான கட்டிட வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் கட்ட கட்டிட வேலைக்காக முனாஸ் நற்பணி மன்றத்தின் செயலாளர் நாயகமும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அக்ரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண உதவி அணையாளருமான எஸ்.எல்.முனாஸ் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை தனது செந்த நிதியிலிருந்து ஒதுக்கியுள்ள விடயம் குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலுவில் பிரதேசத்தில் கணிணி இயந்திர விற்பணை நிலையம் ஒன்றில் ஆபாசப் படங்களை விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி ஒலுவில் தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள கணிணி விற்பனை நிலையத்தை இரவு வேலை 9.35 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு சோதனை நடாத்தப்பட்ட போது பொலிஸார் 1200 ஆபாச இறுவெட்டுக்கள், இரு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணிணி இயந்திரம் என்பவற்றை மீட்டு அங்கிருந்த மூவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரையும் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
குறித்த விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி ஒலுவில் தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள கணிணி விற்பனை நிலையத்தை இரவு வேலை 9.35 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு சோதனை நடாத்தப்பட்ட போது பொலிஸார் 1200 ஆபாச இறுவெட்டுக்கள், இரு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணிணி இயந்திரம் என்பவற்றை மீட்டு அங்கிருந்த மூவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரையும் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
இம்மாதம் முதல் வடக்குஇகிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள பிரதானமான வைத்தியசாலைகளில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஆலோசனைகளையும் விபத்துகள் ஏற்படும்போது சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக மாவட்டத்தின் ஒரு வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு இதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூலம் விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான உடற் தகுதியைத் தீர்மானிப்பதுடன்இ வைத்திய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஊக்கமருந்து மற்றும் உற்சாகபானம் போன்றவற்றின் பாவனையையும் இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவின் மூலம் கண்டறிந்து கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. (எம் .ஐ.முஹம்மட் பைசல்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 2011 ஆம் ஆண்டு கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் முதலாம் இடம்பெற்ற சோபர் விளையாட்டுக் கழகம் 2007 ஆம் ஆண்டிலிருந்து தொடராக முதலாம் இடத்தினை சுவிகரித்து வருகின்றது. இக்கழக வீரர்களையும், சிறந்த வீரருக்கு அட்டாளைச்சேனை பிரதேச உதவி செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்திப் சான்றிதழ் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விளையாட்டு மைதானத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தை அட்டாளைச்சேனை சுப்ப சோனிக் விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தை அட்டாளைச்சேனை வுழு இலவன் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது.
2007 ஆம் ஆண்டு தொடர்க்கம் இவ்வாண்டு (2011) வரைக்கும் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் தொடராக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வருகின்ற விடயம் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்ட்டார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஒலுவில் அல் - ஹம்றா பாடசாலை மாணவன் முஹம்மது றஜாஸ் கான் இவ்வாண்டுக்கான (2011) சிறந்த விளையாட்டு வீரராகவும், 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரராக அட்டாளைச்சேனை சுப்ப சோனிக் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் எம்.ஐ.முஹம்மட் மிப்றான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
கல்முனை நகரிலிருந்து அம்பாறைஇஅக்கரைப்பற்றுஇ மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் போன்ற இடங்களுக்கு இரவு 7 மணிக்குப் பின்னர் போக்குவரத்து வசதிகள் எதுவுமின்மையால் தூர இடங்களிலிருந்து கல்முனைக்கு வரும் பயணிகள் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
தூர இடங்களிலிருந்து கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தமது இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக இ.போ.ச.வுக்குச் சொந்தமான பஸ்களோஇ தனியார் போக்குவரத்து பஸ்களோ இரவு 7 மணிக்குப் பின்னர் சேவையில் ஈடுபடுவதில்லை. இதனால் முச்சக்கரவண்டிகளுக்குப் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து அல்லது வவுனியாஇதிருகோணமலைஇயாழ்ப்பாணம்இ கொழும்பு ஆகிய தூர இடங்களில் இருந்து வரும் பஸ்கள் வரும் வரை நீண்டநேரம் காத்திருந்து அல்லது கால்நடையாகவே தமது வீடுகளுக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலை காணப்படுகிறது.
எனவேஇ இவ்விடயத்தில் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையை உரிய நடவடிக்கையெடுக்குமாறு பயணிகள் கேரிக்கை விடுத்துள்ளனர். (எம்.ஐ.முஹம்மட் பைசல்)
வளப்பற்றாக் குறைகளுடன் மீனோடைக்கட்டு
அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
இன்றைய காலத்தில் சகல சமூகங்களும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், போஷாக்கு நிலை, கலை, கலாசாரம், அரசியல், சமூகப்பண்பாடு அம்சங்கள், வேதனம், வீடமைப்பு, நிலவுரிமை, போக்குவரத்து, அரசாங்கத் தொழில் வாய்ப்புக்கள், பல்கலைக்கழக அனுமதிகள், தொழில் நுட்பக் கல்லூரி அனுமதிகள் போன்ற வற்றில் கடந்தகால செயற்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சியடைந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
தற்காலத்திலே ஏற்பட்டிருக்கும் நவீன வளர்ச்சி காரணமாக நாம் கல்வியை தேடிச்சென்று படிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. கல்வி தான் ஒரு சமூகத்தின் முதலீடாகும். இதனை உயர்த்துவதற்கு நாம் பல வேலைத் திட்டங்களை செயற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருந்து கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் மாணவர்களின் கல்வித் தேவையை ஈடு செய்வதில் ஆரம்பப் பாடசாலைகள் பெரும் பங்காற்றுகின்றன. எமது நாட்டிலே பல ஆரம்பப் பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்ற நிலைமையினை காணக்கூடியதாகவும், கேள்வியுறக்கூடியதாகவும் உள்ளன.
இவ்வாறான பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்கின்றார்கள், எதனைக் கற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. இவ்வாறு பல பாடசாலைகள் இருந்தாலும் அம்மாணவர்களின் கற்றலுக்கு மகிழ்ச்சிகரமான சூழலை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
அதற்கமைவாக பல பாடசாலைகள் வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கிக் கொணடிருக்கும் பாடசாலைகளில் ஒரு பாடசாலையே அக்கரைப்பற்று வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை, மீனோடைக்கட்டு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாகும்.
அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியிலுள்ள இப்பாடசாலை 1950 ஆம் ஆண்டு 01 ஆம் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 61 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள இந்தப் பாடசாலை இன்னும் வளர்ச்சியடையாமல் இருப்பது கவலைக்குரியதாகும். எனினும் இப்பாடசாலை 1950 ஆம் ஆண்டு தரம் 01 தொடர்க்கம் க.பொ.த. சாதாரண தரம் வகுப்பு வரை ஆரம்பித்து இயங்கி வந்த நிலையில் 1977 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் தரத்தை டைப் மூன்றாக மாற்றப்பட்டதன் பின்னர் தரம் 01 தொடர்க்கம் க.பொ.த. சாதாரண தரம் வகுப்பு வரை இயங்கி வந்ததை தரம் 01 தொடர்க்கம் தரம் 05 வரையிலான வகுப்புக்களாக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டதனால் மாணவர்களின் தொகையும் கணிசமான முறையில் குறைவடைந்துள்ளது. அதனால் ஆசிரியர்களின் தொகையும் குறைக்கப்பட்டுள்ளன.
உலகத்திலோ அல்லது நாட்டிலுளோ யாரை எடுத்துக் கொண்டாலும் பருவாயில்லை. ஒருவர் தான் ஆரம்பிக்கும் எக்காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அவ்விடயத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்ற நோக்குடனே செயற்படத் தொடங்குவார் அந்த வகையில் உதரணமாக வியாபாரத்தை எடுத்துக் கொள்வோமாயின் அந்நபர் ஆரம்பிக்கும் முன் சிறியதாக ஆரம்பித்து நாற்களோ அல்லது வருடங்களோ செல்லச் செல்ல அவ்வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து செல்கின்றோமா? அல்லது வீழ்ச்சியடைந்து செல்கின்றோமா? என விடை கிடைத்து விடும்.
(அட்டாளைச்சேனை: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் 10 ஆம் பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் வாழைமரம் ஒன்று அதிசயமான முறையில் வாழை மரத்தின் நடுத்தண்டில் அதன் குழையை போட்டிருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட முழுவதற்குமான 'முனாஸ் நற்பணி மன்றம்' அம்பாறை மாவட்டத்திலுள்ள மிக வறிய குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நாளாந்தம் அத்தியவசிய தேவைகளை நிறைவுசெய்யக் கூடியவற்றை இலவசமாக செய்து கொடுத்து வருகின்ற முறையை முன்னெடுத்து வருகின்றன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலமுனை உசைனியா நகர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வறிய குடும்பங்களுக்கு இலவச மின்சார வசதியும், நீர் இணைப்பு வசதியும் செய்து கொடுத்துள்ளது. மேலும் அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதியில் இரு வறிய குடும்பங்கள் இணம் காணப்பட்டு அவர்களுக்கான மலசல கூட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.
அத்துடன் 'முனாஸ் நற்பணி மன்றம்' மிக மிக வறிய குடும்பங்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது.அதன் ஆரம்பமாக பாலமுனை ஓ.பி.ஓ. வீதியைச் சேர்ந்த பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் ஆரம்பப் பணியை முன்னெடுத்து வீடு கட்டிக் கொடுப்பதற்கான கட்டிட வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் முதல் கட்ட கட்டிட வேலைக்காக முனாஸ் நற்பணி மன்றத்தின் செயலாளர் நாயகமும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அக்ரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண உதவி அணையாளருமான எஸ்.எல்.முனாஸ் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை தனது செந்த நிதியிலிருந்து ஒதுக்கியுள்ள விடயம் குறிப்பிடத்தக்கதாகும்.
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் செயலிழந்து காணப்படும் தெருவிளக்குகள் மற்றும் அத்தியவசிய இடங்களுக்கான புதிய தெரு மின் விளக்குகளையும் இணைக்கும் நிர்மானப்பணியை உடன் அமுல்படுத்தி நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்டபட்ட எல்லைப்பகுதியில் வசித்து வருகின்ற அட்டானைச்சேனை, தைக்காநகர், சம்புநகர், ஆலங்குளம், முல்லைத்தீவு, கோணாவத்தை, மீனோடைக்கட்டு, பாலமுனை, சின்னப்பாலமுனை, திராய்கேணி, மற்றும் அஷ்ரப் நகர், ஒலுவில் ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளத்தின் போது செயல் இழந்து போன தெரு மின்விளக்குகளை மாற்றவும், மிக முக்கிய இடங்களில் தெருமின் விளக்கிணைப்பு இல்லாத இடத்தில் அதற்கான இணைப்பினையும் எற்படுத்திக் கொடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் குறிப்பிட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அக்ரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண உதவி அணையாளருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக 5 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மக்களின் தேவைகள் காணப்படுமிடத்து அதற்கான இரண்டாம் கட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் மேலும் குறிப்பிட்டதாக எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தர பிரிவுகளில் கல்வி கற்பதற்குத் தகுதியான புதிய மாணவர் மாணவிகளுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து க.பொ.த. உயர்தரப் பிரிவுகளில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்கத் தகுதியான மாணவர் மாணவிகளுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரக் கல்வியை மேற்கௌ;ள விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் அல் ஹாஜ் எம்.ஏ.சி.கஸ்ஸாலியிடம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனுமதி பெற்ற புதிய மாணவர்களுக்கான வகுப்புக்கள் 2011.05.010 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் அன்றைய தினமும் மாணவர் மாணவிகளுக்கான அனுமதியும் ஏற்றுக்கொள்ளப்படுமென பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை முதலாம் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அப்பகுதி மக்களிடத்தில் கையொப்பம் கோரி சதி முயற்சி செய்ய முற்பட்ட ஒப்பந்தக்கார குழுவினரை அப்பகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை 3.15 மணியளவில் ஜீப் வண்டியில் ஒரு ஒப்பந்தக்கார குழுவினர் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவில் வசிக்கும் மக்களிடத்தில் வந்து வெள்ளை நிற வெற்றுப் பத்திரத்தில் கையொப்பமிடும் படியும் உங்களின் வீதி மற்றும் வடிகான் அடங்கிய அபிவிருத்தி வேலைகளை நீங்கள் விரும்புகின்ற வடிவில் அமைத்து வெள்ள நீர் வடிந்து செல்லக் கூடியவாறு அமைத்துத் தருகின்றோம் எனக் கூறி அப்பகுதி மக்களிடத்தில் வற்புருத்திக் கோரியதாகத் தெரிவிக்கின்றனர்.
இச்செயலினை அப்பகுதி மக்கள் எதிர்த்துத்பேசி அவ் ஒப்பந்தக்கார குழுவினரை விரட்டி விட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேர்மையாகவும், நீதியாகவும் செயல்படுகின்ற ஒப்பந்தக்காரர்களுக்கு அவப்பேரினை எற்படுத்திக் கொடுக்கம் வகையில் சில ஒப்பந்தக்காரர்கள் செய்யும் பிழையான நடத்தையினால் ஒட்டு மொத்தமாக எல்லோரும் பாதிப்படைகின்றனர்.
அபிவிருத்தி செய்யப்படுவதன் நோக்கம் மக்கள் சந்தோஷமாக வாழ்க்கையை கொண்டு செல்வதற்கேயன்று கஷ்டப்படுவதற்கு அல்ல இதனை கருத்திற் கொண்டு ஒப்பந்தக்காரர்கள் செயல்பட முயற்சிக்க வேண்டும். மேலும் மக்களின் நலன் கருதி செயல்படும் ஒப்பந்தக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் அபிவிருத்திப் பணியினை பாரம் கொடுக்க உயர் அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் நம்நாடு நம்மக்கள் அபிவிருத்தியை முன்னோக்கிச் செல்லலாம்.
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)