Latest News

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் 4ஆம்திகதி விநியோகம்


பெப்ரவரி 15, 2011: உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படும் என தபால் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் மூன்றாம் திகதி தபால் திணைக்களத்துக்குக் கிடைக்கும் என பிரதித் தபால் மா அதிபர் ஆர்.டீ. சீ காமினி குறிப்பிட்டுள்ளார்
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் காலத்தில் அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்கும் தபாலகங்களுக்கும் விநியோகிக்கும் தபால்காரர்களுக்கும் விசேட பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 23 இலட்சத்து 55 ஆயிரத்து 500 ஆகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.