
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதிலும் சுமார் 1105 பேர் டெங்கு நோயினால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 பேர் டெங்கினால் பலியாகியதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 892 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதத்தில் 213 பேர் இந்த நோயினால் இணம்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டமே அதிக அளவில் டெங்கு பாதிப்பை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 305 பேரும், இந்த மாதம் 78 பேரும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதுடன், இந்த இரண்டு மாதங்களில் 6 பேர் பலியாகியதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது