ஒலுவில் பிரதேசத்தில் கணிணி இயந்திர விற்பணை நிலையம் ஒன்றில் ஆபாசப் படங்களை விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி ஒலுவில் தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள கணிணி விற்பனை நிலையத்தை இரவு வேலை 9.35 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு சோதனை நடாத்தப்பட்ட போது பொலிஸார் 1200 ஆபாச இறுவெட்டுக்கள், இரு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணிணி இயந்திரம் என்பவற்றை மீட்டு அங்கிருந்த மூவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரையும் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Latest News