(எம்.எஃப்.அலா சிபாக்)
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமுக்கு எதிராக நாளாந்தம் வெளியிடப்பட்டு வருகின்ற துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கடிதங்களும். அதற்கு அமைவாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று (02.05.2011) திங்கட்கிழமை வெளியான பகிரங்கக் கடிதமும் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டதற்கு அமைவாக அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களே! நீங்கள் கடந்த கால பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் பார்ப்போமாயின் அம்பாறை கல்வி வலயத்தில் 301 சிங்கள மேலதிக ஆசிரியர்களும், தெஹியத்த கண்டியில் 39 சிங்கள மேலதிக ஆசிரியர்களும் மொத்தமாக 340 சிங்கள மேலதிக ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதன் படியும் மேலும் மகஒயாவில் 4 சிங்கள ஆசிரியர்களும், கந்தளாயில் 27 சிங்கள ஆசிரியர்களும் மொத்தமாக 31 சிங்கள ஆசிரியர்களின் தேவைப்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக 340 சிங்கள மேலதிக ஆசிரியர்களில் 31 தேவைப்பாடு ஆசிரியர்களை கழித்துப்பார்க்கையில் 309 சிங்கள மேலதிக ஆசிரியர்கள் உள்ள நிலையினை அறிந்தும் கடந்த திங்கட்கிழமை (02.05.2011) ஆம் திகதி அன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் 70 சிங்கள கலைப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலைமையில் தொடர்ச்சியாக தமிழ், முஸ்லிம் வேலையற்ற பட்டதாரிகளை திட்டமிட்டு புறக்கணித்து வருவதற்குக் காரணம் என்ன?
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 6 ஆயிரத்திற்கு மேல் காணப்படுவதாகவும் இதில் தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்புக்கள் மிக அருகியே காணப்படுவதாகவும் ஆசிரியர் சமப்படுத்தல் எனும் போர்வையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்காது சுமார் 10 வருடங்களாக தமிழ் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் மட்டும் முட்டுக்கட்டையாக இருப்பது ஏன்? இச்செயல் ஆச்சரியத்தையும், மனவேதனையும் தரக்கூயவாறு ஏன் உள்ளாh? இவ்விடயம் விளங்காத புதிராகவுள்ளது.
இவ்வாறு பல கேள்விகள் எழுப்பிய பல துண்டுப் பிரசுரங்கள் தொடராக வெளியாகிக் கொண்டு வருவதை அறியக்கூடியவாறுள்ளது. மேலும் மேல் மாகாணத்தில் 4856 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் அது உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஆசிரியர்கள் மேலதிகமா இருக்கின்ற நிலையில் மேலும் தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி அங்கு நான் அரச செலவு வீண்விரயமாவதை விரும்பவில்லை என நிஸாம் ஏன் மேல் மாகாணத்தில் 4856 ஆசிரியர்கள் இருப்பதினால் அங்கு அரச செலவு வீண்விரயம் செய்யப்படுகின்றது. அல்லவா இதற்கான உங்கள் விளக்கம் என்ன? என்றும் அக்கடிதத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிக்கின்றனர்.
Latest News