அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டம் அன்மையில் அக்கரைப்பற்று மர்கஸ் பள்ளிக்கு அருகாமையில் முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார் இந்நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அழைத்து வரப்படும் போது வீதி நெடுங்கிலும் போலீஸ் மற்றும் ஆர்மி வீரர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். அமைச்சர் அழைத்து வரப்பட்டடு நிகழ்வு ஆரம்பித்த போது மர்கஸ் பள்ளிவாசலின் ஒலிபெருக்கியில் மற்றுமொரு கட்சி ஆதரவாளர்களால் பள்ளிவாசலின் ஒலிபெருக்கி கட்சிகளின் தேர்தல் பிரசார மேடையாக்க பட்டதும், மக்கள் கூட்டம் அலைதிரண்டு ரவூப் ஹக்கீம் வெளியேறு என்று கூச்சலிட்டது மாத்திரமல்லாது கல்லும் எறியப்பட்டது.
இதற்கு மத்தியிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார். நாகரீகமற்ற அரசியல் செய்ய வேண்டாம் என்று அக்கரைப்பற்று மக்களிடம் இறுதியாக கேட்டுக்கொண்டார்.