உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தொடராக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இதில் அதிகம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் வீடுகளும் பொருட்களும் என பலவகையான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் மத்திய குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.
மேலும் சட்டத்தரணி கபூர் தெரிவிக்கையில் தேர்தலை எதிர் நோக்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அக்கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதனை கவனத்திற் கொண்டு செயல்பட முயற்சிப்பதுடன் அவர்களை அரியாமல் நடைபெறுகின்ற பாதிப்புக்களுக்கும் உரிய அதிகாரிகளே பதில் கூறவேண்டிய நிலைமையும் ஏற்படும் எனவும் தெரிவித்ததுடன்
அதற்கு அமைவாக கட்சியின் தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் அணைவரும் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுகையில் இயலுமான அளவு பிரசார நடவடிக்கையிலும் சரி ஏனைய விடையங்களாக அமைந்தாலும் சரியே தங்களின் செயற்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
இவை மட்டுமல்லாது நம் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு எல்லாக் கட்சியினரும் தங்களின் அபிவிருத்தியைப் பற்றியும் தாங்கள் வெற்றி பெற்றால் எதைச் செய்வோம் என்ற விடையங்களைப் பற்றியும் மக்களிடத்தில் உங்கள் பிரசாரத்தில் தெரியப்படுத்தி வருவோம் ஆயின் நல்லதோர் சமூதாயத்தை கட்டியெழுப்புவதுடன் ஓர் ஒற்றுமைபாட்டையும் எடுத்துக்காட்டாகவும் அமையும் எனவும் தெரிவித்தார். (எம்.எப்.அலா சிபாக்)