

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 2011 ஆம் ஆண்டு கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் முதலாம் இடம்பெற்ற சோபர் விளையாட்டுக் கழகம் 2007 ஆம் ஆண்டிலிருந்து தொடராக முதலாம் இடத்தினை சுவிகரித்து வருகின்றது. இக்கழக வீரர்களையும், சிறந்த வீரருக்கு அட்டாளைச்சேனை பிரதேச உதவி செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்திப் சான்றிதழ் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)