அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விளையாட்டு மைதானத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தை அட்டாளைச்சேனை சுப்ப சோனிக் விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தை அட்டாளைச்சேனை வுழு இலவன் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது.
2007 ஆம் ஆண்டு தொடர்க்கம் இவ்வாண்டு (2011) வரைக்கும் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் தொடராக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வருகின்ற விடயம் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்ட்டார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஒலுவில் அல் - ஹம்றா பாடசாலை மாணவன் முஹம்மது றஜாஸ் கான் இவ்வாண்டுக்கான (2011) சிறந்த விளையாட்டு வீரராகவும், 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரராக அட்டாளைச்சேனை சுப்ப சோனிக் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் எம்.ஐ.முஹம்மட் மிப்றான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.