Latest News

இரவு நேர பஸ் சேவை இன்மையால் கல்முனைக்கு வரும் பயணிகள் சிரமம்





கல்முனை நகரிலிருந்து அம்பாறைஇஅக்கரைப்பற்றுஇ மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் போன்ற இடங்களுக்கு இரவு 7 மணிக்குப் பின்னர் போக்குவரத்து வசதிகள் எதுவுமின்மையால் தூர இடங்களிலிருந்து கல்முனைக்கு வரும் பயணிகள் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
தூர இடங்களிலிருந்து கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தமது இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக இ.போ.ச.வுக்குச் சொந்தமான பஸ்களோஇ தனியார் போக்குவரத்து பஸ்களோ இரவு 7 மணிக்குப் பின்னர் சேவையில் ஈடுபடுவதில்லை. இதனால் முச்சக்கரவண்டிகளுக்குப் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து அல்லது வவுனியாஇதிருகோணமலைஇயாழ்ப்பாணம்இ கொழும்பு ஆகிய தூர இடங்களில் இருந்து வரும் பஸ்கள் வரும் வரை நீண்டநேரம் காத்திருந்து அல்லது கால்நடையாகவே தமது வீடுகளுக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலை காணப்படுகிறது.
எனவேஇ இவ்விடயத்தில் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையை உரிய நடவடிக்கையெடுக்குமாறு பயணிகள் கேரிக்கை விடுத்துள்ளனர். (எம்.ஐ.முஹம்மட் பைசல்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.