Latest News

வளப்பற்றாக் குறைகளுடன் மிநோடைக்கட்​டு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை






வளப்பற்றாக் குறைகளுடன் மீனோடைக்கட்டு
அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
இன்றைய காலத்தில் சகல சமூகங்களும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், போஷாக்கு நிலை, கலை, கலாசாரம், அரசியல், சமூகப்பண்பாடு அம்சங்கள், வேதனம், வீடமைப்பு, நிலவுரிமை, போக்குவரத்து, அரசாங்கத் தொழில் வாய்ப்புக்கள், பல்கலைக்கழக அனுமதிகள், தொழில் நுட்பக் கல்லூரி அனுமதிகள் போன்ற வற்றில் கடந்தகால செயற்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சியடைந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
தற்காலத்திலே ஏற்பட்டிருக்கும் நவீன வளர்ச்சி காரணமாக நாம் கல்வியை தேடிச்சென்று படிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. கல்வி தான் ஒரு சமூகத்தின் முதலீடாகும். இதனை உயர்த்துவதற்கு நாம் பல வேலைத் திட்டங்களை செயற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருந்து கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் மாணவர்களின் கல்வித் தேவையை ஈடு செய்வதில் ஆரம்பப் பாடசாலைகள் பெரும் பங்காற்றுகின்றன. எமது நாட்டிலே பல ஆரம்பப் பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்ற நிலைமையினை காணக்கூடியதாகவும், கேள்வியுறக்கூடியதாகவும் உள்ளன.
இவ்வாறான பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்கின்றார்கள், எதனைக் கற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. இவ்வாறு பல பாடசாலைகள் இருந்தாலும் அம்மாணவர்களின் கற்றலுக்கு மகிழ்ச்சிகரமான சூழலை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
அதற்கமைவாக பல பாடசாலைகள் வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கிக் கொணடிருக்கும் பாடசாலைகளில் ஒரு பாடசாலையே அக்கரைப்பற்று வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை, மீனோடைக்கட்டு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாகும்.
அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியிலுள்ள இப்பாடசாலை 1950 ஆம் ஆண்டு 01 ஆம் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 61 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள இந்தப் பாடசாலை இன்னும் வளர்ச்சியடையாமல் இருப்பது கவலைக்குரியதாகும். எனினும் இப்பாடசாலை 1950 ஆம் ஆண்டு தரம் 01 தொடர்க்கம் க.பொ.த. சாதாரண தரம் வகுப்பு வரை ஆரம்பித்து இயங்கி வந்த நிலையில் 1977 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் தரத்தை டைப் மூன்றாக மாற்றப்பட்டதன் பின்னர் தரம் 01 தொடர்க்கம் க.பொ.த. சாதாரண தரம் வகுப்பு வரை இயங்கி வந்ததை தரம் 01 தொடர்க்கம் தரம் 05 வரையிலான வகுப்புக்களாக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டதனால் மாணவர்களின் தொகையும் கணிசமான முறையில் குறைவடைந்துள்ளது. அதனால் ஆசிரியர்களின் தொகையும் குறைக்கப்பட்டுள்ளன.
உலகத்திலோ அல்லது நாட்டிலுளோ யாரை எடுத்துக் கொண்டாலும் பருவாயில்லை. ஒருவர் தான் ஆரம்பிக்கும் எக்காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அவ்விடயத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்ற நோக்குடனே செயற்படத் தொடங்குவார் அந்த வகையில் உதரணமாக வியாபாரத்தை எடுத்துக் கொள்வோமாயின் அந்நபர் ஆரம்பிக்கும் முன் சிறியதாக ஆரம்பித்து நாற்களோ அல்லது வருடங்களோ செல்லச் செல்ல அவ்வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து செல்கின்றோமா? அல்லது வீழ்ச்சியடைந்து செல்கின்றோமா? என விடை கிடைத்து விடும்.
(அட்டாளைச்சேனை: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.