கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட முழுவதற்குமான 'முனாஸ் நற்பணி மன்றம்' அம்பாறை மாவட்டத்திலுள்ள மிக வறிய குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நாளாந்தம் அத்தியவசிய தேவைகளை நிறைவுசெய்யக் கூடியவற்றை இலவசமாக செய்து கொடுத்து வருகின்ற முறையை முன்னெடுத்து வருகின்றன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலமுனை உசைனியா நகர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வறிய குடும்பங்களுக்கு இலவச மின்சார வசதியும், நீர் இணைப்பு வசதியும் செய்து கொடுத்துள்ளது. மேலும் அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதியில் இரு வறிய குடும்பங்கள் இணம் காணப்பட்டு அவர்களுக்கான மலசல கூட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.
அத்துடன் 'முனாஸ் நற்பணி மன்றம்' மிக மிக வறிய குடும்பங்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது.அதன் ஆரம்பமாக பாலமுனை ஓ.பி.ஓ. வீதியைச் சேர்ந்த பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் ஆரம்பப் பணியை முன்னெடுத்து வீடு கட்டிக் கொடுப்பதற்கான கட்டிட வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் முதல் கட்ட கட்டிட வேலைக்காக முனாஸ் நற்பணி மன்றத்தின் செயலாளர் நாயகமும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அக்ரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண உதவி அணையாளருமான எஸ்.எல்.முனாஸ் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை தனது செந்த நிதியிலிருந்து ஒதுக்கியுள்ள விடயம் குறிப்பிடத்தக்கதாகும்.
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)