அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் செயலிழந்து காணப்படும் தெருவிளக்குகள் மற்றும் அத்தியவசிய இடங்களுக்கான புதிய தெரு மின் விளக்குகளையும் இணைக்கும் நிர்மானப்பணியை உடன் அமுல்படுத்தி நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்டபட்ட எல்லைப்பகுதியில் வசித்து வருகின்ற அட்டானைச்சேனை, தைக்காநகர், சம்புநகர், ஆலங்குளம், முல்லைத்தீவு, கோணாவத்தை, மீனோடைக்கட்டு, பாலமுனை, சின்னப்பாலமுனை, திராய்கேணி, மற்றும் அஷ்ரப் நகர், ஒலுவில் ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளத்தின் போது செயல் இழந்து போன தெரு மின்விளக்குகளை மாற்றவும், மிக முக்கிய இடங்களில் தெருமின் விளக்கிணைப்பு இல்லாத இடத்தில் அதற்கான இணைப்பினையும் எற்படுத்திக் கொடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் குறிப்பிட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அக்ரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண உதவி அணையாளருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக 5 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மக்களின் தேவைகள் காணப்படுமிடத்து அதற்கான இரண்டாம் கட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் மேலும் குறிப்பிட்டதாக எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
எம்.ஐ.முஹம்மட் பைஷல்)