Latest News

மாணவ மாணவிகளுக்​கான அனுமதி

(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தர பிரிவுகளில் கல்வி கற்பதற்குத் தகுதியான புதிய மாணவர் மாணவிகளுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து க.பொ.த. உயர்தரப் பிரிவுகளில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்கத் தகுதியான மாணவர் மாணவிகளுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரக் கல்வியை மேற்கௌ;ள விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் அல் ஹாஜ் எம்.ஏ.சி.கஸ்ஸாலியிடம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனுமதி பெற்ற புதிய மாணவர்களுக்கான வகுப்புக்கள் 2011.05.010 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் அன்றைய தினமும் மாணவர் மாணவிகளுக்கான அனுமதியும் ஏற்றுக்கொள்ளப்படுமென பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி தெரிவித்தார்.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.