அட்டாளைச்சேனை முதலாம் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அப்பகுதி மக்களிடத்தில் கையொப்பம் கோரி சதி முயற்சி செய்ய முற்பட்ட ஒப்பந்தக்கார குழுவினரை அப்பகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை 3.15 மணியளவில் ஜீப் வண்டியில் ஒரு ஒப்பந்தக்கார குழுவினர் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவில் வசிக்கும் மக்களிடத்தில் வந்து வெள்ளை நிற வெற்றுப் பத்திரத்தில் கையொப்பமிடும் படியும் உங்களின் வீதி மற்றும் வடிகான் அடங்கிய அபிவிருத்தி வேலைகளை நீங்கள் விரும்புகின்ற வடிவில் அமைத்து வெள்ள நீர் வடிந்து செல்லக் கூடியவாறு அமைத்துத் தருகின்றோம் எனக் கூறி அப்பகுதி மக்களிடத்தில் வற்புருத்திக் கோரியதாகத் தெரிவிக்கின்றனர்.
இச்செயலினை அப்பகுதி மக்கள் எதிர்த்துத்பேசி அவ் ஒப்பந்தக்கார குழுவினரை விரட்டி விட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேர்மையாகவும், நீதியாகவும் செயல்படுகின்ற ஒப்பந்தக்காரர்களுக்கு அவப்பேரினை எற்படுத்திக் கொடுக்கம் வகையில் சில ஒப்பந்தக்காரர்கள் செய்யும் பிழையான நடத்தையினால் ஒட்டு மொத்தமாக எல்லோரும் பாதிப்படைகின்றனர்.
அபிவிருத்தி செய்யப்படுவதன் நோக்கம் மக்கள் சந்தோஷமாக வாழ்க்கையை கொண்டு செல்வதற்கேயன்று கஷ்டப்படுவதற்கு அல்ல இதனை கருத்திற் கொண்டு ஒப்பந்தக்காரர்கள் செயல்பட முயற்சிக்க வேண்டும். மேலும் மக்களின் நலன் கருதி செயல்படும் ஒப்பந்தக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் அபிவிருத்திப் பணியினை பாரம் கொடுக்க உயர் அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் நம்நாடு நம்மக்கள் அபிவிருத்தியை முன்னோக்கிச் செல்லலாம்.
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)