Latest News

பாதை அமைக்கும் பணியல் அதிருப்திய​டையும் பொதுமக்கள்


அட்டாளைச்சேனை ஏ.ஆர்.எம்.மில் வீதியை கொங்றீட் வீதியாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற விடயத்தில் எதிர் காலங்களில் பாரிய ஆபத்தான நிலையினை சந்திக்க வேண்டி வரும் நிலை குறித்து அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
ஜெயிக் நிருவனத்தின் உதவியில் பல இலட்சம் ரூபா செலவில் ஏ.ஆர்.எம்.மில் வீதியை கொங்றீட் வீதியாக மாற்றியமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வீதியை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் முறையின் படி கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அணர்த்தத்தின் போது இப்பகுதி மக்கள் பட்ட கஷ்டத்தையும், அவதியையும் விட பல மடங்கு கஷ்டமும், அவதியும் குறித்த திட்டத்தின் மூலமாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் பல ஒப்பந்தக்காரர்களினால் செப்பனிடப்;பட்ட எல்லா வீதிகளிலும் கிறவல் மண்ணை போட்டு போட்டு வீதிகளை உயர்வாக அமைத்ததினால் மக்களின் வசிப்பிட வளவுகள் தாழ் நிலமாக மாறியது. இதனால் கடந்த கால வெள்ள அணர்த்தத்தின் போது மக்கள் அனுபவித்த பாரிய கஷ்டத்தையும், துன்பத்தையும் விட்டு இதுவரை காலமும் மீள முடியாதவர்களாக இருக்கின்றனர்.
இந்நிலைமையில் தற்போது ஏ.ஆர்.எம்.மில் வீதியை கொங்றீட் வீதியாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள முறையின் படி மீண்டும் அப்பகுதி மக்களை பாதிப்புக்குள்ளாக்க முயற்சி செய்யும் ஒப்பந்தக்காரர்களிடம் வீதி அபிவிருத்தியாக இருந்தாலும் சரி மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளாக இருந்தாலும் சரியே இப்படிப்பட்ட ஒப்பந்தக்காரர்களிடம் அபிவிருத்திப்பணிகளை வழங்கும் உயர் அதிகாரிகள் நீதியாகவும், நேர்மையாகவும், நன்கு சிந்தித்து செயல்படக் கூடிய ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும். ஏன அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.