நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நூற்றுக்கு 68 வீதமான வாக்குப்பதிவுகள் அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றிருப்பதாகவும், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அம்பாறை மாவட்டத்தில் 17 கண்காணிப்பாளர்கள் கொண்ட 84 உத்தியோகத்தர்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்ட கபே அமைப்பின் அமைப்பாளரும், ட்ருவிஷன் அமைப்பின் தலைவருமான எம்.ஏ.சி.எம்.உவைஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்ளூ
அம்பாறை மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது கடந்த வியாழக்கிழமை வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக கபே அமைப்பினால் 5 குழுக்கள் நியமிக்கப்பட்டு இதில் கரையோரப் பிரதேசத்துக்கென 3 குழுக்களும் அம்பாறை சிங்களப் பிரிவுக்கு 2 குழுக்களும் நியமித்து 17 கண்காணிப்பாளர்களுடன் 84 உதவி உத்தியோகத்தர்களை தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட முழுவதிலும் எமது உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்களிப்பின் போது நடைபெறுகின்ற அசம்பாவிதங்களை உடனுக்குடன் தலைமைக் காரியாலயத்துக்கு தொலைபேசி மூலம் அறிக்கைகளை அறிவித்து கொண்டிருந்தார்கள்.
இதில் காலை முதல் மாலை வரையிலான காலப்பகுதிக்குள் அம்பாறை மாவட்டத்தின் வாக்குப் பதிவுகளின் படி அக்கரைப்பற்று மாநகர சபைக்கு 65 வீதமான வாக்குகளும், அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு 68 வீதமும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு 71.23 வீதமும், நிந்தவூர் பிரதேச சபைக்கு 65 வீதமும், சம்மாந்துறை பிரதேச சபைக்கு 52 வீதமும், நாவிதம்வெளி பிரதேச சபைக்கு 49 வீதமும், இறக்காமம் பிரதேச சபைக்கு 75 வீதமும், ஆலயடிவேம்பு பிரதேச சபைக்கு 68 வீதமும், பொத்துவில் பிரதேச சபைக்கு 71 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன என்று அம்பாறை மாவட்ட கபே அமைப்பின் அமைப்பாளர் எம்.ஏ.சி.எம்.உவைஸ் மேலும் தெரிவித்தார்.
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Latest News