Latest News

பத்திரிகை நேரத்திற்கு இல்லாமையும் அப்பிரதேச வாசகர்கள் மற்றும் மாணவர்ளின் பாதிப்பும்



அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் தரம் மூன்றில் பதிவு செய்யப்பட்ட ஐந்து நூலகங்கள் தற்போது இயங்கி வருவதுடன், பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள சனசமூக நிலையங்களின் வேண்டுகோளிற்கமைவாக ஆங்காங்கே பல வாசிகசாலைகளும் இயங்கிக் கொண்டு வருகின்றன.

பிரதான நூலகங்களில் பொது மக்களது பார்வைக்காக வைக்கப்படுகின்ற பத்திரிகைகளின் சம எண்ணிக்கையான தினசரிப் பத்திரிகைகள் சனசமூக நிலைய வாசிகசாலைகளிலும் பிரதேச சபையின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு சேவை நோக்கில் மக்களது பார்வைக்காக இடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அட்டாளைச்சேனை 01ஆம் பிரிவில் மஸ்ஜிதுல் பலாஹ் (ஏ.சி) பள்ளி வாசல்; வளவில் அமைந்துள்ள மர்ஹூம் அஷ்ரப் ஞாபகார்த்த வாசிகசாலையை சனசமூக நிலைய நிருவாகிகள் கடந்த காலங்களில் பிரதேச சபையின் மூலம் ஓரிரு பத்திரிகைகளைப் பெற்று அந்த வாசிகசாலை நடாத்தி வந்தனர்.

இவ்வாசிகசாலையை அதிகமான மக்கள் பயன்படுத்துவதனால் இதனை சற்று விரிவு படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் முன்னை நாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில் நாட்டில் வெளிவருகின்ற அனைத்து தேசியப் பத்திரிகைகளையும் இச்சனசமூக நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு

சனசமூக நிலையங்கள் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இதனை முறையாக பராமரிப்பதற்கு ஒருவரை பொறுப்பாக்கி அவருக்கு சிறியதொரு வேதனக் கொடுப்பனவை சபையின் மூலம் வழங்க அனுமதி வேண்டி அம்பாறை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் முன்னைநாள் தவிசாளர் கோரியபோது, சனசமூக நிலையங்களின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற சேவைகளை குறித்த அந்த சனசமூக நிலைய நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும். என்று கூறியமையால் இம்முயற்சி பயனளிக்காது போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு அஸ்ரப் ஞாபகார்த்த வாசிகசாலை நிலையத்திற்கான பத்திரிகைகளை வியாபார நிலையங்களிடமிருந்து பெற்று அதனை பொது மக்களது பார்வைக்கு விடும் பொறுப்பை அக்கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் எம்.ஏ.சி.எம்.பதுர்தீனிடம் ஒப்படைக்கப்பட்டது.

எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் சமூக சேவை சிந்தனையோடும், அக்கிராம மாணவர்கள் மற்றும் வாசகர்களது நலன் கருதியும் ஏற்று மிகவும் சிறப்பாக இச்சமூகப் பணியை மேற்கொண்டு வந்தார்.

தற்போது அண்மைக்காலமாக குறித்த இவ்வாசிகசாலைக்கான பத்திரிகைகள் தாமதாகி வருவதனால் இக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெறும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தினசரிப் பத்திரிகைகளை சமூக சேவை சிந்தனையோடு செய்து செயற்பட்டு வந்த எம்.ஏ.சி.எம்.பதுர்தீனிடம் கேட்ட போது அவர் பதிலளிக்கையில்ளூ நான் கடந்த பல மாதகாலமாக இச்சேவையை ஒரு மனிதாபிமான முறையில் செய்து வந்தேன். இப்பணியை தொடர்ந்து செய்யவேண்டும் என்றால் எனக்கு சிறு பணத்தையேனும் மாதா மாதம் வழங்க சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செயற்படவேண்டும்.
மேலும் அவர் கூறுகையில்ளூ இன்றைய நாட்டு நிலைமையை அவதானிப்போமையானால் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. இந்நிலையில் சிறு ஊதியம் கூட இல்லாமல் எப்படி பணியாற்ற முடியும்.
இருந்து கூட வாசிகசாலைக்கு தினசரிப் பத்திரிகையை பார்க்க வரும் மக்களுக்கான அச்சேவையை நான் நிறுத்திவிடவில்லை தொடர்ந்தும் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால் நான் செய்யும் சேவையில் ஒரு வித்தியாசமா நடைமுறை தோன்றியுள்ளது.
முன்னர் இவ்வாசிக சாலைக்கான தினசரிப் பத்திரிகைகளை காலை 9.30 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொண்டு வந்து விடுவேன். கடந்த ஒரு சில வாரங்களாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு என்னால் அப்பத்திரிகைகளை கொண்டு வர முடியாத நிலையில் உள்ளேன்.
எதிர்வரும் காலங்களிலும் நேரம் குறிப்பிடப்பட்ட வேளைக்கு என்னால் செய்யமுடியாது எனவும், நான் எனது வாழ்கைக்கான செலவுகளுக்கு ஒரு தொழில் செய்ய வேண்டிய நிலை தோன்றியுள்ளது. எனவும் கூறினார்.

அட்டாளைச்சேனை முதலாம் பிரிவில் உள்ள சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அவர்கள் கூறிய பதில்ளூ எங்களின் சனசமூக அமைப்பிடம் பணம் இல்லாததன் காரணத்தினால் எங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கப்பெற்று வந்த அஷ்ரப் ஞாபகார்த்த வாசிகசாலையை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் போனதால் அட்டாளைச்சேனை பிரதேச சபையினூடாக தினசரிப் பத்திரிகைகளை பெற்று வழங்கி வருகின்றோம்.
இந்நிலையினை ஏற்படுத்தித் தந்த முன்னை நாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸிலுக்கு நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதுடன் அவர் ஏற்படுத்தித் தந்த இந்த வசதி வாய்ப்புக்களை எங்கள் நிர்வாகத்தினரும், இப்பகுதி மக்களும் நன்றி உள்ளம் கொண்டவர்களாக எப்போதும் இருப்போம் எனத்தெரிவித்ததுடன் தற்போது எங்கள் சனசமூக நிலையம் இயக்கம் பெறாத நிலையில் பல மாதங்களாக உள்ளது. எனவும் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றர்.
இதுபற்றி பத்திரிகை வாசகர்களிடம் கேட்ட போது......ஏ.எல்.கிதாஸ் முஹம்மட்
முன்னர் பத்திரிகைகளை சாதாரணமாக பார்த்து வந்தேன். இந்த வாசிகசாலைக்கு நம் நாட்டில் வெளியிடப்படுகின்ற எல்லா வகையான தினசரி பத்திரிகைகள் இங்கு வருவதாகவும், அன்று பத்திரிகையில் வெளியான செய்திகள் பற்றி என் நண்பர்கள் தினமும் ஒன்று கூடும் ரூமில் கதைக்க கதைக்க எனக்கு ஆர்வம் பெருகியது. அதன் பின் நான் பத்திரிகைகளை பார்க்கத் தொடங்கினேன்.
தற்போது இங்கு தினசரிப் பத்திரிகைகள் உரிய நேரத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. இதனால் எனக்கு மட்டும் அல்ல என் நண்பர்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெரும் கவலையுடனும் காணப்படுவதாகவும் தெரிவித்து இந்நிலைமை முன்னர் நடைபெற்றது போல் இயக்கம் பெற இது தொடர்பான அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


ஏ.தாணிஸ் அஹமட் (தேசிய பாடசாலை மாணவன்)
வாசிப்பு பழக்கமும் அறிவும் ஒரே நேரத்தில் வளரத் தொடங்கியது. என மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன். இவ்வாசிகசாலைக்கு கொண்டு வரப்படும் தினசரிப் பத்திரிகைகளில் அதிக அதிகம் விருப்பத்துடன் மெட்ரோ நியூஸ் மற்றும் தினக்குரல், விரகேசரி ஆகிய மூன்று பத்திரிகையை விளம்பரம் தொடர்க்கம் மரண அறிவித்தல் வரை முற்று முழுதாக பார்த்து முடிப்பேன். என்றும்
கடந்த சில வாரங்களாக எனக்கு பத்திரிகைகள் பார்க்கக் கிடைக்க வில்லை ஏன் என்றால் நான் பாடசாலையை விட்டு வந்து அவசர அவசரமாக சாப்பிட்ட பின் இவ்வாசிக சாலைக்கு வந்து விடுவேன். ஏனெனில் பாடசாலையை விட்டு வீட்டுக்கு வந்தபின் கிடைக்கும் நேரம் ஒரு மணித்தியாலயமாகும். அந்த ஒரு மணித்தியாலயத்தையும் இவ்வாசிகசாலைக்கே செலவு செய்து விடுவேன்.

தற்போது ஏற்பட்டுள்ள தினசரி பத்திரிகை தாமதம் தொடர்பாக எனக்கு நேரம் கிடைப்பதில்லை. அந்த ஒரு மணித்தியாலயம் தான் எனக்கு கிடைக்கும் நேரம். மற்றைய நேரங்களில் மாலை நேர வகுப்புக்கு சென்று வீட்டுக்கு வந்த பின்பு அன்றைய தினம் பாடசாலையில் கற்பித்த பாடங்களை மீண்டும் படித்துக் கொள்வேன்.

தற்போது இவ்வாசிகசாலையின் இந்நிலை தொடருமானால் என்னைப் போன்ற பல மாணவர்கள் பாதிப்படைந்து வருவதுடன், நாளாந்தம் தகவல் தேடும் நிலைமையும் இல்லாமல் போய்விடும். இந்நிலைமையினை மாற்றியமைத்து உரிய நேரத்திற்கு பத்திரிகைகளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னைநாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸிலிடம் தொடர்பு கொண்டு அஷ்ரப் ஞாபகார்த்த வாசிகசாலையின் நிலையினை எத்தி வைத்து அதற்கான ஒரு தீர்வினை செய்து கொடுக்கும்படி கேட்டபோது அவர் கூறுகையில்ளூ

கடந்த காலங்களில் இவ்வாசிகசாலை தூர்ந்து போகும் நிலையிலேயே காணப்பட்டது. இருந்த போதிலும் இவ்வாசிகசாலை பள்ளிவாசல் மற்றும் குர்ஆன் மத்ரஸா போன்ற மார்க்கத்தைப் போதிக்கும் முக்கிய இடங்களின் மத்தியில் அமையப் பெற்றுள்ளதால் அதனை தூர்ந்து போக விடக்கூடாது என்ற நோக்கில் நான் செயற்பட்டே இதற்கான சகல வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திருந்தேன்.

மேலும், இப்பிரதேசத்தில் முக்கிய நூலகங்களில் ஒன்றான அட்டாளைச்சேனை பொது நூலகத்தில் பொது மக்களது பார்வைக்காக வைக்கப்படுகின்ற பத்திரிகைகளை விடவும் அதிகமான பத்திரிகைகள் இவ்வாசிசசாலைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

அதுமாத்திரமல்லாமல் இவ்வாசிகசாலையைப் போன்று ஏனைய பல சனசமூக நிலையங்களின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கமைவாக பல வாசிகசாலைகளுக்கு பிரதேச சபையின் மூலம் பத்திரிகைகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். எனத்தெரிவித்தார்.

எனவே வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது என்பர். வாசிப்பின் மூலம் மனிதனின் மொழியாற்றலும் அறிவும் மேம்படுகின்றது. வாழ்நாள் முழுவதும் வாசிப்பவனாக இருக்க வேண்டும். என்ற உயர்ந்த நோக்கில் அரசும், அரச சார்பற்ற அமைப்புக்களும் வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றை அமுல் படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகின்றன.

எது எவ்வாறாயினும் வாசிப்பும் தகவல் தேடுகையும் பரிபூரணமானதொரு சமூகத்தின் இலட்சணங்களாக அமையப் பெற்ற அமைவிடத்தில் பலமாத காலமாக எவ்வித வேதனக் கொடுப்பனவுகளும் இல்லாமல் கடமை புரிந்த எம்.ஏ.சி.பதுர்தீனுக்கு இந்த ஊர் மக்களால் அல்லது பொது அமைப்புக்கள், ஊரில் மிகப் பெரிய பெரிய பதவியில் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் உயர் மனம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஒரு சிறு தொகை ஊதியம் கொடுத்து அவரை மீண்டும் வேவையில் அமர்த்த நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களின் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்டு வரும் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிவர்த்திக்க துணை நிற்பார்களா???
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.