Latest News

பல வீதிகளில் ஓளி விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள பல வீதிகளில் மின் விளக்குகள் ஒளிராமல் இருள் சூழ்ந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக காணப்படுகின்றன.


இதனால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்ல பாதையினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பொதுமக்களும் மற்றும் வாகனங்களின் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.


கடந்த வெள்ள அணர்த்தத்திற்கு முன்னர் வீதிகளில் உள்ள மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. வெள்ள அணர்த்தத்தின் போதும் அதன் பின்னரும் பல வீதிகளில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் விட்டதனால் அட்டாளைச்சேனையிலுள்ள பல வீதிகள் இருள் சூழ்ந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக காட்சி தருவதை காணக்கூடியதாகவுள்ளது.


இவைமட்டுமல்ல வெள்ள அணர்த்;தத்தின் போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக பல வீதிகள் வெட்டப்பட்டும் இதுவரை செப்பனிடப்படாமலும் உள்ளது. இந்நிலைமையில் பல வீதிகளில் மின் விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் சென்று தங்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் உள்ளதாகவும் பிரதேச வாசிகளும், பயணிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.


தற்போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச மக்களால் அதிக விருப்பு வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்த ஏ.எல்.எம்.நஸீர் தனது தவிசாளர் பதவியை ஏற்றதும் இதனைக் கவனத்திற் கொண்டு செயற்பட முயற்சிக்கவேண்டும்.


எனவே அட்டாளைச்சேனை பிரதேச மக்களால் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவான ஏ.எல்.எம்.நஸீர் தவிசாளர் பதவியை ஏற்றதும் அம் மக்களின் நம்பிக்கையை வீண்போகாமலும் மற்றும் அவர் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குருதிகளை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் அப்பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இம்முறை மக்களின் விருப்பு வாக்கின் மூலமாக தெரிவான உறுப்பினர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை என்பது திண்ணம்.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.