தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19,20,21 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான பொருளாதார அபிவிருத்தி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்தை நோக்கி எனும் தலைப்பில் இடம்பெறவுள்ள ஆய்வரங்கிற்கு,100 இற்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆய்வுக்கட்டுரைகளும் 100 இற்கு மேற்பட்ட உள்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், அரச நிறுவனங்களினது ஆய்வுக்கட்டுரைகளும் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, 60 இற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், விரிவுரையாளர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சமூக விஞ்ஞானம்,விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகமும் முகாமைத்துவமும்,மொழி, சமயம், கலாசார இயற்கை வளங்களும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும்’ ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எதிர்பாக்கப்பட்டுள்ளன.
ஆய்வுப் பத்திரங்கள் கடந்த ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வரங்கில் பங்கு கொள்வதற்கான பதிவுகள் ஆய்வரங்கு நடைபெறும் தினம் வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை
ஆய்வரங்கச் செயலகத்துடன் தகவல்களைப் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பீடங்களின் தனித்தனி ஏற்பாட்டில் இதற்கு முன்னர் இரண்டு சர்வதேச ஆய்வரங்குகள் இடம்பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு இது வென்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் சர்வதேச ஆய்வரங்கு கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெறவிருந்து கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
( MF. ALA SIFAK )
( MF. ALA SIFAK )