Latest News

அபிவிருத்தி பணியை முன்னெடுத்துச் செல்ல



இன மத பேதமின்றி மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய தவிசாளராக பதவியெற்கும் ஏ.எல்.எம்.நஸீர் நடந்து கொள்ள வேண்டும். என அட்டாளைச்சேனை பிரதேச தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மக்களின் அதிக விருப்பு வாக்கின் மூலம் தெரிவான ஏ.எல்.எம்.நஸீர் தனது கடமையில் நீதியாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வார் என அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வாழும் சகல இனமக்களும் எதிர்பார்க்கின்றனர். தற்போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்படுவதனால் அபிவிருத்திப் பணியினை முன்னெடுத்துச் செல்ல எதுவித தங்குதடை இன்றி முன்னெடுத்துச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. இதனை கவனத்திற் கொண்டு புதிய தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் சகல அபிவிருத்தி வேலைகளையும் செவ்வனே நிறைவேற்றுவார் என அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேணி, ஒலுவில், தைக்கா நகர், கோணாவத்தை, அஷ்ரப் நகர், சம்பு நகர், ஆலங்குளம், தீகவாபி, மீநோடைக்கட்டு ஆகிய கிராமங்களில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கடந்த காலங்களில் தவிசாளராக இருந்த எம்.ஏ.அன்ஸில் தவிசாளராக இருந்த காலப்பகுதியில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசை எதிர்த்து எதிர்க்கட்சியில் இணைந்து செயல்பட்ட காலத்திலும் கூட அவர் தனது கடமையில் நேர்மையாகவும், நீதியாகவும் இனமத வேறுபாடின்றி எவ்வாறு அபிவிருத்திப் பணியை மேற்கொண்டாரோ அதை விடவும் பல மடங்கு மேலாக அபிவிருத்திப் பணியினை முன்னெடுத்துச் செல்ல புதிய தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் முயற்சிக்க வேண்டும். என அட்டாளைச்சேனை பிரதேச மூவின மக்களும் தங்களின் கோரிக்கைகளை விடுக்கின்றனர்.


எனவே அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை கடந்த தேர்தலின் போது காட்டி அவர்கள் அளித்த அதிக விருப்பு வாக்கின் மூலம் தவிசாளராகத் தெரிவான ஏ.எல்.எம்.நஸீர் தனக்கு கிடைத்துள்ள பதவி மூவின மக்களின் ஒற்றுமையின் பரிகாரமாகக் கிடைத்தது என என்னி அம்மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

(எம்.எப்.அலா சிபாக்)

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.