Latest News

பொது நூலகத்திற்கு நிரந்தர ஊழியரை நியமித்து தர கோரிக்கை



அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நெக்டெப் திட்டத்தினால் கட்டி முடிக்கப்பட்ட பொது நூலகத்தை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உதவி தவிசாளருமான எம்.ஏ.அன்ஸிலினால் திறந்து வைக்கப்பட்ட இந்நூலகத்திற்கு நிரந்தரமாக கடமை புரிய ஊழியர்களை நியமித்து தருமாறு அப்பிரதேச வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உதவி தவிசாளருமான எம்.ஏ.அன்ஸிலினால் திறந்து வைக்கப்பட்ட அட்டாளைச்சேனை கோணாவத்தை பொது நூலகத்திற்கு இதுவரை காலமும் நிரந்தரமான எந்த ஊழியர்களையும் நியமிக்காததால் குறிப்பிட்ட நூலகம் நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை எனவும் மற்றும் தினசரிப் பத்திரிகைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.


மேலும் குறிப்பிட்ட கோணாவத்தை நூலகம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குக் கீழ் இயங்கி வருகின்றது. இந்நூலகத்திற்கு நான்கு ஊழியர்களுக்கான வெற்றிடம் உள்ள நிலைமையை கவனத்திற் கொண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளரான ஏ.எல்.எம்.நஸீர் நிரந்தர கடமைபுரியம் ஊழியர்களை நியமித்துத்தர வேண்டும். அல்லது நேரத்திற்கு நூலகத்தை திறப்பதற்கும் மற்றும் தினசரிப் பத்திரிகைகளை கொண்டு வருவதற்குமாவது தற்போது ஒரு ஊழியரை நியமித்துத்தர வேண்டும். என அப்பிரதேச வாசகர்களும், மாணவர்களும், கல்விமான்களும், உலமாக்களும் கோரிக்கை தெரிவிப்பதோடு உரிய நேரத்திற்கு தினசரிப்பத்திரிகை தாமதம் காரணமாக பெறும் சிரமங்களையும் எதிர் நோக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.


எனவே அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவான புதிய தவிசாளரான ஏ.எல்.எம்.நஸீர் தான் தவிசாளர் கடமைப் பொறுப்பெற்று ஓரிரு நாட்களுக்குள் அட்டாளைச்சேனை கோணாவத்தை பொது மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை புதிய தவிசாளரான ஏ.எல்.எம்.நஸீருக்கு முதன்முதலாக விடுத்துள்ள வேண்டுகோளை நிவர்த்தி செய்து கொடுக்க முயற்சிக்க வேண்டும்.



(எம்.எப்.அலா சிபாக்)

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.