கிழக்கு மாகாண சபையினால் ஜப்பான் அரசாங்கத்தின் ஜெபிக் திட்டத்தின் கீழ் அம்பாறை, உகண, தமண, ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை சுமார் 252 மில்லியன் ரூபா செலவில் கொங்கிறீட் வீதிகள் அமப்பதற்கான வேலைத்திட்டமொன்றை அண்மையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கொண்டு வருகின்றார்.
இது தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டமும் அண்மையில் அம்பாறை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அம்பாறை, உகண, தமண, ஆகிய பிரதேசங்களில் கொங்கிறீட் வீதிகள் அமைப்பதற்காக முறையே 73 மில்லியன், 109 மில்லியன், 70 மில்லியன் ஆகிய ரூபாவினை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு ஜெபிக் திட்டத்தின் மூலம் இவ்வேலையை சிறப்பாக மேற்கொள்வதற்கு பிரதேச செயலக முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதற்கமைவாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏ.ஆர்.எம்.மில் வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த இவ்வீதியை தற்போது அகழப்பட்டு கொங்கிறீட் போடுவதற்கான ஏற்பாடுகளும் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அப்பிரதேச மக்களால் குறித்த வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றுவதை தடை செய்யும் முயற்சியில் உள்ளூராட்சி ஆணையாளர் திருகோணாமலை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அம்பாறை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கு கொங்கிறீட் வீதியமைப்பு தொர்பான முறையீட்டு கடிதம் ஒன்றை அப்பிரதேச மக்களின் கையொப்பமிடப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இப்பாதை குடியிருப்பு வளவுகளின் மட்டத்ததைவிட சற்று உயர்வானதாகவே காணப்படுகின்றது. இதனால் எதிர் காலத்தில் மழை காலங்களில் தேங்கி நிற்கின்ற வெள்ள நீரை வளவுகளில் இருந்து அப்புரப்படுத்துவதற்கு எவ்வித மாற்று வழியும் இல்லாத நிலை உள்ள காரணத்தினை முன்வைத்தே அக்கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயம்ளூ
ஏ.ஆர்.எம்.மில் வீதியை கொங்கிறீட் வீதியாக நிர்மானிப்பதெனில் வெள்ள நீரினால் தொடர்ந்தும் இப்பிரிவு மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அசௌகரியங்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் வகையில் பாதையின் இருமருங்கிலும் வடிகான்களை அமைத்த பின்னர் இப்பாதையை நிர்மானம் செய்யுமாறும் அல்லது பாதையின் மேற்பரப்பு எமது குடியிருப்பு வளவுகளைவிட சற்று தாழ்வாக அமைத்துத்தர நடவடிக்கையினை மேற்கொண்டு உதவுமாறும் வேண்டப்பட்டு உரிய உயர் அதிகாரிகளுக்கு குறித்த வீதி தொடர்பாக அப்பிரதேச மக்களால் முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அட்டாளைச்சேனை முதலாம் பிரிவில் உள்ள ஏ.ஆர்.எம்.மில் வீதி பகுதியில் வசிக்கும் மக்களின் நீன்டநாள் தூரநோக்காக் கொண்ட இவ்விடயத்தினை இவை தொடர்பான உயர் அதிகாரிகள் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்
(எம்.எப்.அலா சிபாக்)