Latest News

வைத்தியசாலைகள் அதிகரிப்பது ஒரு நாட்டின் முன்னேற்றம்


வைத்தியசாலைகள் அதிகரிப்பது ஒரு நாட்டின் முன்னேற்றம் என்று கருதமுடியாது.மாறாக அந்த நாட்டிலிலுள்ள மக்கள் மத்தியில் சுகாதாரம் பேணப்படவில்லை என்பதுதான் அர்த்தமாகுமென இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம்.றைஸ் தெரிவித்துள்ளார்.
இறக்காமம் சுகாதார வைத்தியசாலை அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு அண்மையில் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள மாணவர் சுகாதாரக் கழகங்கள்இ ஆசிரியர்கள்இ உலமாக்கள் மற்றும் மாதர் அமைப்புக்கள் என சுமார் 100 பேர் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இங்கு வைத்திய அதிகாரி தொடர்ந்து உரையாற்றுகையில்;

இன்று ஒவ்வொரு கிராமத்துக்கும் பல நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.வைத்தியசாலைகள் அதிகரித்தால் சுகாதார பழக்கவழக்கமற்ற மக்கள் அந்த நாட்டில் அதிகம் உள்ளனர் என்பதே பொருளாகும்.தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் சுகாதாரம் சரியாகப் பேணப்படும்போது நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்காது. மேலைத்தேய நாடுகளில் மக்கள் வைத்தியர்களைச் சந்திப்பது தாம் சுகதேகிகளாக இருப்பதைத் தெரிவித்து இன்னும் சுகத்துடன் வாழ என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கேட்பதற்காகத்தான்.ஆனால் நமது நாட்டில் நோயாளிகள் தினமும் வைத்தியர்களுக்கு பணம் செலுத்தி ஏதாவதொரு நோய் பற்றிக் கூறி மருந்துகளைப் பெற்று வருகின்றனர்.

சமூகத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஆசிரியர்கள்இமாணவர்கள் சுத்தம் பற்றிய தகவலை முழு சமூகத்திற்கும் எடுத்துக் கூற வேண்டும்.மனிதனுடைய உச்சம் தலைமுதல் உள்ளங்கால் வரைக்குமான உறுப்புக்களை தினமும் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.இதன் மூலமே நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
(MF. ALA SIFAK)

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.