உதைபந்தாட்டச் சங்கத்தின் கூட்டம் உரிய காலத்தில் கூட்டப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற விதியை மீறி கால எல்லையைக் கடந்தும் கூட்டம் கூட்டப்படாமல் கழகம் தொடர்ந்தும் இயங்குவதாக மருதமுனை ஊகிங்ஸ் லெவன்üவிளையாட்டுக் கழகத் தலைவர் இசட்.ஏ.எச்.றஹ்மான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே நீதிபதி இந்தத் தடை உத்தரவை பிறப்பித்தார்.
சங்க யாப்பின் 22 ஆவது பிரிவின் 2 ஆவது சரத்திற்கு முரணாகச் செயல்பட்டமையினாலேயே இத்தடையுத்தரவு விதிக்கப்பட்டது.
இதேவேளை அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு இதன் முதற்கட்ட விசாரணையின் பிரகாரம் வங்கிகளில் உள்ள மேற்படி சங்கத்தின் கணக்கு விபரங்களைத் திரட்டி இது தொடர்பான அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் விசாரணையினைத் துரிதப்படுத்துமாறும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.றிஸ்வி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( MF. ALA SIFAK )