Latest News

சேதமடைந்தவற்றை திருத்தியமைக்க உலக உணவுத்திட்டம்


வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சேதமடைந்துள்ள நீர்ப்பாசனக் கால்வாய்கள்,வீதிகள் மற்றும் வடிகால்கள் ஆகியவற்றைத் திருத்தியமைப்பதற்கு உலக உணவுத்திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப்பிரிவுகள் தோறும் கிராம சேவகர்கள் ஊடாக தொழிலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு சேதமடைந்த குறித்த பிரதேசங்கள் இனங்காணப்பட்டு திருத்தியமைக்கப்படவுள்ளது.தொழிலாளர்களுக்கு நாளாந்தக் கூலியாக தலா 500 ரூபா வழங்கப்படவுள்ளது.

பொத்துவில்,திருக்கோவில்,ஆலையடிவேம்பு,அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,நிந்தவூர்.சம்மாந்துறை,காரைதீவு போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது .(எம்.ஐ.முஹம்மட் பைசல் )

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.