Latest News

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு மூன்று மாத சம்பள முற்பணக் கடன் கொடுக்கப்பட்டது




அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமை புரியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வெள்ள நிவாரண விஷேட முற்பணக் கடன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்படைந்த அட்டாளைச்சேனை பிரதேச செயகத்தில் கடமை புரியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மூன்று மாத சம்பள முற்பணக் கடன் கடந்த வியாழக்கிழமை 2011.03.31 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும், அதனை இரண்டு வருடங்கில் மீள அறவிடுவதற்கும் திட்டமிடப்பட்டு சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தபடி அறவீடு செய்யப்படும்.

இக்கடனை 2011 மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்குமாறு கேட்டிருந்தபடி இவ்மூன்று மாத சம்பள முற்பணக் கடன் கடந்த வியாழக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் இக்கடனுக்கு விண்ணப்பித்த எல்லா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


(எம்.எப்.அலா சிபாக்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.