அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்தகால வெள்ளத்தினால் அசுத்தமடைந்த கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையினை உடன் முன்னெடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரும்பாலான பிரதேசங்களில் கிணறுகள் அசுத்தமடைந்துள்ளன. இதன் காரணமாக குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இந்நிலைமையினைக் கருத்தில் கொண்டு செயற்பட உரிய அதிகாரிகள் நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (எம்.ஐ.முஹம்மட் பைஷல்)