
அரச சேவை உத்தியோகத்தர்களின் கவனக் குறைவால் பாதிப்படையும் பொதுமக்கள் பொதுமக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு பட்ட காரியாலயங்கள் அமைக்கப்பட்டு அது தொடர்பான உத்தியோகத்தர்களையும் நியமனம் செய்து ஒரு நிருவாக முறையின் மூலமாக இயங்கப்பெற அதற்காக அரசாங்கம் சகல வசதி வாய்ப்புக்களையும் செய்து கொடுத்துள்ளது. ஏனெனில் மக்களுக்காகத்தான் அரசாங்கம் உள்ளது. அதனால் அரசாங்கம் மக்களின் பல்வேறுபட்ட தேவைகளையும், பிரச்சினைகளையும் மற்றும் குறைபாடுகளையும் நிறைவு செய்வதற்கென பல்வேறு வகையான காரியாலயங்களை அமைத்து அவர்களின் தேவைகளை உரிய முறையில் உரிய நேரத்தில் செய்து கொடுப்பதற்காகவே அவை தொடர்பான உயர் அதிகாரிகளையும், உத்தியோகத்தர்களையும், ஊழிர்களையும் நியமித்து அவர்களுக்கு உரிய முறையில் ஊதியமும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலைமையில் அரச காரியாலயங்களில் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அரசாங்கம் தகுதியானவர்களை தெரிவு செய்து அவர்களின் தகுதிக்கெற்ப பதவிகளைக் கொடுத்து அவரவர்களுக்கென்று உரிய இடங்களும் வழங்கி அமர்த்தப்பட்டு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மக்களுக்கு பல்வேறுபட்ட துறைகளில் பணிபுரிந்து நாட்டின் மேம்பாட்டுக்காக உழைக்கின்றோம் என்ற போர்வையில் இயங்கி வரும் சில அரச உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கர் செய்து வரும் தவரினால் நேர்மையான முறையில் பொதுமக்களின் தேவைகளை உரிய முறைப்படி உரிய நேரத்தில் செய்து முடித்துக் கொடுக்கின்ற நேர்மையுள்ளம் கொண்ட உயர் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் இச்செயலினால் பாதிப்படைகின்றனர். அந்த வகையில் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தல் கடமை புரியும் உயர் அதிகாரியினாலும், உத்தியோகத்தர்களாலும் பாதிக்கப்பட்ட பல மக்கள் உள்ளனர். இதில் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்ட சில மக்களுக்கு எவ்வித விடைகளும் கிடைக்காமல் தவிக்கின்றனர். அதற்கமைவாக பாதிப்படைந்த சில மக்கள் என்னை நாடி சகல ஆவணங்களையும் காண்பித்து கிழக்கு தினக்குரல் பத்திரிகை மூலமாக தங்களுக்கு விடிவு காலம் கிடைக்குமா? எனக் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக...... அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மூலம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் அதிகம் மோட்டார் வாகன போக்கு வரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிக மோசமான முறையில் பாதிப்புக்குள்ளான அட்டாளைச்சேனை முதலாம் பிரிவிலுள்ள முஹம்மது பைஷல் இஸ்மாயில் கூறுகையில்ளூ கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது சாரதி அனுமதிப்பத்திரம் காணாமல்போன விடயம் குறித்து அதற்கான சகல ஆவனங்களையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக மோட்டார் வாகன போக்கு வரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் முஹம்மட் அஸ்வரிடம் ஒப்படைத்து பதில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக 600 ரூபா பணமும் செலுத்தியுள்ளார். பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டும் வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாத காலத்துக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். அது வரைக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை பாவிக்கும் படி அதில் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் குறித்த வாகனங்களை செலுத்த முடியும். என அவ்வுத்தியோகத்தரினால் அறிவுரையும் கூறப்பட்டு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வருடம் இரண்டு கடந்தும் கூட அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக மோட்டார் வாகன போக்கு வரத்துப் பிரிவினால் வழங்கி வைக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் கால எல்லை பல தடவை முடிவுற்றபோதெல்லாம் அவ் உத்தியோகத்தரினால் புதுப்பித்து கால எல்லையை நீடித்தும் வழங்கப்பட்டுள்ளன. இது அவ்வாறு இருக்க, 2 வருடமும் 6 மாதங்கள் கடந்தும் குறிப்பிட்ட நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் கிடைக்காத நிலைமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட அவ் உத்தியோகத்தரிடம் தெரிவித்தபோது அவ் உத்தியோகத்தர் கூறிய பதில்ளூ எங்களால் எதுவுமே செய்ய முடியாது, நீங்கள் தரும் ஆவணங்களை மட்டும் தான் இங்கிருந்து அனுப்பிவைக்க முடியும். சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட்டுத்தர முடியாது. எனக்கூறிவிட்டு நான் அனுப்பி வைத்த ஆவணத்தின் பிரதிகளைத் தருகின்றேன் விரும்பினால் இதை எடுத்துக் கொண்டு கொழும்புக்குச் சென்று நாராயண்பிட்டியில் உள்ள இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளுங்கள். என்று கூறப்பட்டதற்கு அமைவாக சகல அவணங்களையும் பெற்றுக் கொண்டு கொழும்பு, நாராயன்பிட்டியில் உள்ள இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்குச் சென்று உரிய அதிகாரியிடம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக மோட்டார் வாகன போக்கு வரத்துப் பிரிவின் உத்தியோகத்தரினால் பெறப்பட்ட சகல ஆவணங்களையும் கொடுத்து தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை தரும்படி கோரியுள்ளார். அதற்கு அமைவாக அவ்வுத்தியோகத்தர் அதனைப் பார்த்துவிட்டு வெரஹெரவில் அமைந்துள்ள காரியாலயத்திற்குச் சென்று உங்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்று கூறியதைக் கேட்டு அங்கு சென்று பரிசீலித்து பார்த்தபோது இப்படிப்பட்ட ஒரு பைல் எங்களுக்கு கிடைக்கவில்லை, நீங்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலக மோட்டார் வாகன போக்கு வரத்துப்பிரிவு உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளுங்கள். என்று கூறப்பட்ட இவ்விடயத்தைப் பற்றி எழுத்து மூலமாகவும் எழுதிப் பெறப்பட்டுள்ளன. இந்நிலைமையைப்பற்றி அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர் எம்.எம்.நஸீரிடம் எடுத்துக்கூறி அங்கு கிடைத்த ஆதாரத்தையும் காட்டியபோது குறித்த மோட்டார் வாகன போக்கு வரத்துப் பரிவில் குறித்த கடமையில் இருந்த மருதமுனையைச் சேர்ந்த முஹம்மட் அஸ்வரிடம் வினவப்பட்ட போது அவை தொடர்பான ஆவணங்களை 'போக்கு வரத்து ஆணையாளர், போக்கு வரத்துப் பிரிவு, கொழும்பு – 5.' என்ற விலாசத்துக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவும் அதன் ஆதாரத்தையும் காண்பித்து விட்டு அவ்வுத்தியோகத்தர் அவ்விடத்திலிருந்து நழுவி விட்டார். அதன் பின்னர் பிரதேச செயலக செயலாளர் எம்.எம்.நஸீர் தனக்கு இவ்விடையம் பற்றி எதுவுமே தெரியாது. முன்னர் கடமையிலிருந்த செயலாளர் நியாஸிடம் தான் கேட்க வேண்டும். எனக்கூறிவிட்டு செயலாளர் எம்.எம்.நஸீரும் நழுவி விட்டார். என பாதிக்கப்பட்ட நபர் மனவேதனையுடனும், விசனத்துடனும் தெரிவித்த பின்னர் என் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுத்தருவதற்கு யார்தான் முன் வருவார்கள்? எனக்கு சாரதி அனுமதிப்பத்திரம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற நிலைமையில் குறித்த நபர் உள்ளார். ஆகவே குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் அடங்கிய ஆவணங்கள் 'போக்கு வரத்து ஆணையாளர், போக்கு வரத்துப் பிரிவு, கொழும்பு – 5.' என்ற முகவரிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டவை அங்கும் கிடைக்கவில்லை என எழுத்து மூலமாகவும் எழுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில் உள்ள நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் அடங்கிய ஆவணம் எங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை மறைந்த மாயம் என்ன? அதற்கு என்ன நடந்தது? இதில் தவறு விட்டவர்கள் யார்? அட்டாளைச்சேனை பிரதேச செயலகமா? அல்லது தபால் திணைக்களமா? அல்லது இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமா? இவர்களில் தவறு செய்தவர்கள் யார்??? இந்த கேள்விக்கு யாரால் பதில் கூற முடியும்? ஆனால் இவ்விடயத்தில் ஒன்று மட்டும் தெட்டத்தெளிவாக விளங்குகின்றது இதில் ஒட்டு மொத்தமாக அரச சேவையில் கடமை புரியும் உத்தியோகத்தர்களினால் எங்கேயோ ஒரு காரியாலயத்தில் தவறு நடந்துள்ளது. இவ்விடயம் மட்டும் உன்மை இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே பாதிக்கப்பட்ட இந்த ஏழை மகனின் கேள்விக்கு யார் தான் பதில் கூறப்போகின்றார்களோ தெரியாது. இதனை பொறுத்திருந்து தான் பார்ப்போம். மேலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஓர் நபர் தெரிவிக்கையில் மேற்குறிப்பிடப்பட்ட சம்பவத்தைப் போன்றே இவருக்கும் நடந்துள்ளது. இந்நிலைமையில் இருந்தவருக்கு தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள காரணத்தினால் தனது சாரதி அனுமதிப்பத்திரம் அவசியம் தேவை என்ற கட்டாய நிலைமைக்கு ஆளான அவர் பணம் கொடுத்து பெற்றுச் சென்றதாகவும் கூறிப்பிட்டார். இச்சம்பவம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது. என்ற விடயம் குறிப்பிடத்தக்கது. எனவே அரச சேவையில் கடமை புரியும் அதிகாரிகளின் கவனக் குறைவால் அதிகளவில் பாதிப்படைந்து வரும் பொதுமக்கள் இந்நிலைமை பற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்களும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாப்போல் நழுவி விடுகின்றனர். இதனால் வசதி படைத்தவர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பணத்தினைக் கொடுத்து அதன் மூலமாக சாதித்துக் கொள்கின்றனர். இதில் அகப்பட்டுக் கொள்கின்றவர்கள் நடுத்தர வர்க்கத்தினரும், கூழித் தொழில் செய்கின்றவர்களும் ஆவார். சில அரச உத்தியோகத்தர்களின் செயல் ஏனோ தானோ என்ற நிலையில் பொடுபோக்குத்தனமாக தன் கடமைகளைச் செய்கின்றவர்களுக்கு உயர் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இவர்கள் செய்யும் செயலினால் அவர்களின் செயற்பாடு மேன்மேலும்; அதிகரித்துச் செல்லுமே தவிர குறைவடையாது. குறித்த காரியாலயத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களினால் ஏற்படும் தவறுகள் மூலம் பொதுமக்களுக்கோ அல்லது காரியாலயம் சம்பந்தப்பட்ட விடயங்களிலோ அல்லது பல்வேறு சம்பந்தப்பட்ட விடயங்களிலோ இடம்பெறும் போது அக்காரியாலயத்தில் கடமையில் இருக்கின்ற உரிய உயர் அதிகாரிகள் உரிய நேரத்தில் அத்தவறினைச் சுட்டிக்காட்டி சீர்செய்ய முயற்சிக்க வேண்டும். இவை அவ்வாறில்லாமல் காரியாலயங்களில் இருக்கின்ற உயர் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் செய்யும் தவறுகளுக்கு உயர் அதிகாரிகள் துணைபோகும்போது அவர்களை மேன்மேலும் தவறு செய்யத் தூண்டுபவர்களாக அமைந்து விடுகின்றனர். இச் செயலினால் உத்தியோகத்தர்களினதும், ஊழியர்களினதும் தவறுகளைப் பார்த்தால் அது நீண்ட பட்டியலில் நீண்டு கொண்டு நான் முந்தியா? அல்லது நீ முந்தியா என உத்தியோகத்தர்கள் அடிபுடி பட்டுச் செல்கின்றனர். இப்படிப்பட்ட உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் செய்யும் தவறுகளினால் பாதிப்படைகின்ற நடுத்தர வர்க்கத்தினரும், விவசாயத் தொழில் செய்கின்றவர்களும் மற்றும் நாளாந்தம் கூழித்தொழில் செய்து தனது குடும்பங்களை நடாத்திக் செல்;பவர்களும் பாதிப்படைகின்றனர். எனவே அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மாதாந்த ஊதியத்தைப் பெறும்போது மிக்க மகிழ்ச்சியுடன் உசார் நிலையில் நின்று பெறுவதைப் போன்று ஏன் தங்களின் கடமைகளில் அசமந்தத்தனமாக உள்ளனர்? என்று புரியாமல் உள்ளது. மேலும் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் மாதாந்தம் எடுக்கும் ஊதியத்துக்கு ஏற்றாப்போல் தங்களின் கடமைகளிலும் அக்கறைகாட்ட முயற்சிக்க வேண்டும். மேலும் அரச கருமங்களில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்களின் தவறுகளினால் நேர்மையாகவும், நீதியாகவும் கடமை செய்யும் உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயரினை பெற்றுக் கொடுக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் சேர்த்து அல்லவா அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். எனவே இவ்வாறான அவப்பெயரை ஏற்படுத்தக் கூடிய முறையில் செயற்பட்டு வருகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களின் பக்கம் அரசாங்கத்தின் அவதானம் திரும்ப வேண்டும்.(மீனோடைக்கட்டு: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)