
குவலயம் போற்றும் குத்பு நாயகத்தின் நினைவாக மௌலவி அல்ஹாஜ் ஏ.வி.றபீயுத்தின் ஜமாலி எழுதிய 'விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான அரசர் முஹ்யுத்தீன் ஆண்டகை' நூல் அறிமுக விழா அண்மையில் அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆப் பள்ளிவாசல் அருகாமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பன்னூலாசிரியர் மௌலவி ஏ.வி.றபீயுத்தின் ஜமாலி உரையாற்றுவதையும், பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பன்னூலாசிரியரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதனையும், கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.எப்.அலா சிபாக்)