Latest News

பல துக்டா இயக்கங்கள் தோற்றம் பெற்றமைதான் இன்றைய முஸ்லிம் சமுகத்தின் சாபக்கேடாகு​ம்

இஸ்லாத்தின் பெயரால் பலதுக்டா இயக்கங்கள் தோற்றம் பெற்றமைதான் இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கான சாபக்கேடாகும்.
(பன்னூலாசிரியர் றபீயுத்தீன் ஜமாலி)
மெய்ஞ்ஞான வழி காட்டல்கள் மறைந்து போலியும் பொய்யுமான பல துக்டா இயக்கங்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றதால் இன்று முஸ்லிம் சமூகம் பிரிந்து சிதறி சின்னா பின்னமாகியுள்ளது. இதுவே இன்றுள்ள முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடாகும். இவ்வாறு அண்மையில் அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆப் பள்ளி வாசலுக்கு அருகாமையில் நடைபெற்ற குவலயம் போற்றும் குத்பு நாயகத்தின் நினைவு மகாநாட்டில் 'விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான அரசர் முஹ்யுத்தீன் ஆண்டகை' என்ற நூலின் ஆசிரியரும் அகில இலங்கை இஸ்லாமிய அழைப்பின் பேரவையின் செயலாளருமான மௌலவி அல்ஹாஜ் ஏ.வி.றபீயுத்தீன் ஜமாலி பேசும் போது கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்ளூ மெய்ஞ்ஞான அரசர் முஹ்யுத்தீன் ஆண்டகை போன்ற ஆண்மீக அரசர்களின் முன்மாதிரிகள் பின்பற்றப்படுமானால் முஸ்லிம் சமூகத்தின் ஆத்ம பலன் மேலோங்கி இன்று எவருக்கும் அஞ்சாது துணிந்து எந்த எதிர்ப்புக்களையும் தூக்கி வீசும் பலமிக்கவர்களாக முஸ்லிம்கள் திகழ்வர் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. இன்று எடுப்பார் கைப்பிள்ளைகளாக தரம் தாழ்ந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தை யாரும் தரக்குறைவாகப் பார்க்கும் நிலையும் வந்திருக்காது எனக் கூறினார்.
மௌலவி அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்ற அம்மகாநாட்டுக்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் சக்கி அதாஉல்லா மற்றும் கல்விமான்கள், உலமாக்கள் இன்னும் பலர் கலந்து கொண்ட அம்மகாநாட்டில் இலங்கை கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் (எம்.எஸ்.ஜி) சிறப்புரை ஆற்றினார்.
மேலும் றபீயுத்தீன் ஜமாலியினால் எழுதப்பட்ட 'விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான அரசர் முஹ்யுத்தீன் ஆண்டகை' என்ற நூலின் முதல் பிரதியை பிரபல தொழில் அதிபர் தேசபந்து டாக்டர் அப்துல் கையூம் பெற்றுக் கொண்டார்.
(எம்.எப்.அலா சிபாக்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.