அம்பாறை மாவட்டத்தில் மரக்கறி வகைகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டே இவ்விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புத்தாண்டுத் தினம் கடந்தும் கூட மரக்கறி விலைகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.
கடந்த சில வருடங்களை விட இம்முறை அதிகமான மக்கள் பொருட்களையும், புத்தாடைகளையும், மரக்கறி வகைகளையும் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அத்துடன் கிராமங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்தோரின் தொகையும் இம்முறை அதிகரித்துக் காணப்பட்டதால் இவ்விலை அதிகரிப்புக்குக் காரணமென கூறப்படுகின்றது.(எம்.எப்.அலா சிபாக்)