மாணவ தாதியர் பயிற்ச்சிக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்,பெண் இருபாலரிடமிருந்து சுகாதார அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மாணவ தாதியர் பயிற்ச்சிக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பான முழு விபரங்களையும் அறிந்து கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை 1 ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்ச்சி நெறிக்கு 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் விஞ்ஞானப் பிரிவில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் நான்கு திறமைச் சித்திகள் உட்பட ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். எனவும் 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
மேலும் இப்பயிற்ச்சிக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.(எம்.எப்.அலா சிபாக்)