Latest News

நாடாளவிய ரீதியல் நடாத்தப்படும் இலத்திரனியல் பயிற்சி



நாடாளவிய ரீதியில் உள்ள பிரதேச ஊடகவியலாளருகளுக்கான தகவல் தொழில் நூட்பம் பற்றிய இலத்திரனியல் பயிற்சிப்பட்டறை கடந்த மாதம் முதல் குழுவுக்கான அமர்வு பயிற்சிப்பட்டறை வெற்றிகரமாக இடம்பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது குழுவுக்கான அமர்வு பயிற்சிப்பட்டறை (31) வியாழக்கிழமை நாடாலவிய ரீதியில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நாடாத்தப்படுகின்றன.

இப்பயிற்சிப் பட்டறைக்கு 19 மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 500 ஊடகவியலாளர்களுக்கு இணையப் பாவனை, புகைப்பட மின்னஞ்சல் செயற்பாட்டு முறை மற்றும் தரவேற்றம் பற்றிய பயிற்சிப்பட்டறைகள் அடங்கிய பயிற்சியினை 31 வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடர்க்கம் மாலை 3.30 மணிவரை இடம்பெறவுள்ளன.

அந்தவகையில் நாடாளவிய ரீதியில் தெரிவான 500 ஊடகவியலாளர்களுக்குமான இப்பயிற்சிப் பட்டறையை 20 நிலையங்களில் நாடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படடுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்களுக்கும் இப்பயிற்சி நெறியை இலங்கை திறந்த பல்கலைக்கழக அம்பாறை கற்கை நிலையத்தில் நாடாத்தப்படுகின்றன.( எம்.எப்.அலா சிபாக் )

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.