அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வழங்கப்படாததனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வருட ஆரம்பத்தில் வழங்கப்படவேண்டிய இலவச சீருடையே இதுவரைக்கும் வழங்கப்படாதுள்ளது. கடந்த காலங்களில் ஜனவரி மாதத்தில் சகல மாணவர்களுக்கும் இச்சீருடை வழங்கப்பட்டு வந்தது. இலவச சீருடையின் காரணமாக பல ஏழை எழிய மாணவர்கள் பெரும் நன்மை பெற்று வந்தனர். இந்நிலையில் இலவச சீருடை வழங்கப்படாதது கவலைக்குரிய ஒரு செயற்பாடாகும்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இலவச சீருடை வழங்குவதற்குறிய எந்த வித நடவடிக்கையினையும் இதுவரை எடுக்க வில்லை என்று குறை கூறப்படுகின்றது. இனியும் இவ் இலவச சீருடைகள் கிடைக்குமா? என மாணவர்கள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே பாடசாலை மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்குரிய இலவச சீருடைகள் கிடைக்க அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(எம்.எப்.அலா சிபாக்)