Latest News

முன்பள்ளி மாணவர்களுக்​கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கைப்பட்​டது

கல்முனை தமிழ்ப் பிரிவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் சமுர்த்தி அபிவிருத்திப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை தமிழ் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கல்முனை சாவரம் பாடசாலை, அகரம் பாடசாலை, நற்பிட்டிமுனை சமாதான பாடசாலை, சேனைக்குடியிருப்பு விவேகானந்தா பாடசாலை, பெரிய நிலாவனை அமெரிக்கன் சிலோன் மிஷன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 105 முன்பள்ளி மாணவர்களுக்கே இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு கல்முனை தமிழ்ப் பிரிவுப் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.